கோவா சர்வதேச திரைப்பட விழாவில் “சிறந்த திரைப்பட அடையாள விருது” வென்ற ‘ஆக்காட்டி’ திரைப்படம்!

22222266 akkaatti

இந்தியாவின் 56வது சர்வதேசக் கோவா திரைப்பட விழாவில் (IFFI), WAVES Film Bazaar பிரிவின் கீழ் வழங்கப்படும் “சிறந்த திரைப்பட அடையாள விருதை” (‘Best Film Identification Award’) தமிழ் திரைப்படமான “ஆக்காட்டி” பெற்றுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் ஆடை வடிவமைப்பாளர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் நிலவும் ‘தாய்மாமன் சீர் வரிசை’ முறையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனதில் எழும் சிக்கல்களையும், மென்மையான உணர்வுகளையும் இத்திரைப்படம் ஆழமாகப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் “ஆக்காட்டி” திரைப்படம், விரைவில் ஒரு ‘நற்செய்தியுடன் முதல் பார்வையை (First Look) வெளியிடும்” எனத் தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version