தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ப்ரியா ஆனந்த், வாமனன் என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் வணக்கம் சென்னை , இரும்பு குதிரை, வை ராஜா வை உள்பட பல திரைப்படங்களை நடித்து பலர் மனதை கொள்ளை கொண்வர்கள்.
தற்போது அவர் அந்தகன், சுமோ, காசேதான் கடவுளடா ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார் .
இந்நிலையில்சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் நித்தியானந்தாவை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அவரை திருமணம் செய்து கொண்டால் தன்னுடைய பெயரை கூட மாற்ற தேவை இல்லை என்று கூறியது சமூகவலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.
அதில் அவர் கூறியுள்ளதாவது, நித்தியானந்தா மீது தனக்கு கிரஷ் என்றும் அவரை திருமணம் செய்ய கூட ஆசைப்படுகிறேன். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் தன்னுடைய பெயரான பிரியா ஆனந்த் என்பதை கூட மாற்றம் அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அவரது இந்த பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#PriyaAnand #Nithyananda
Leave a comment