நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானவர் போனி கபூர்.
எச்.வினோத் இயக்கி இருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதையடுத்து தற்போது எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தை அடுத்து அஜித் நடிக்க உள்ள ‘தல 61’ படத்தையும் தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் சமீபத்திய தெரிவித்துள்ளார்.
அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் ‘தல 61’ படத்தையும் இயக்க உள்ளதாக போனி கபூர் அறிவித்துள்ளார்.