சூர்யாவின் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்: ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு ரிலீஸ்!

karupa

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர் தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ஆக்ஷன் அதிரடி கதைக்களம் கொண்ட ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவுடன் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் சூர்யா ஒரு வழக்கறிஞராக நடிக்கிறார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்தை முதலில் தீபாவளிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. இருப்பினும், VFX போன்ற கிராஃபிக்ஸ் பணிகள் காரணமாகப் படம் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு வெளியீடு காணவுள்ள ‘கருப்பு’ படத்தின் புதிய மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு, ‘கருப்பு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் (First Single) பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதற்காகத் தயாராகி வருகின்றனர்.

Exit mobile version