சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகம்: வீட்டின் முன் குவிந்த ரசிகர்களுக்குத் தீபாவளி வாழ்த்து!

images 1 3

நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்து கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தியதுடன், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தனது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Exit mobile version