download 5 1 6
சினிமாபொழுதுபோக்கு

ஜாக்குலினுக்கு உருகி உருகி கடிதம் எழுதிய சுகேஷ்!

Share

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ஈஸ்டரை முன்னிட்டி இந்தி நடிகையும், தனது காதலியுமான ஜாக்குலின் பெர்னான்டசுக்கு உருகி உருகி வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், “மை பேபி, என் முயல் குட்டி… அடுத்த ஈஸ்டரை இதற்கு முன்பு கொண்டாடிய ஈஸ்டர்களில் மிகவும் சிறந்ததாக மாற்றுவேன். உங்களுக்கு மிகவும் பிடித்த விழாவில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்.

இந்த வருடத்தில் இது உங்களுக்கு மிகவும் பிடித்தமான திருவிழா. இதில் உங்களுடன் இல்லாமல் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன். நீங்கள் ஈஸ்டருக்கு முட்டையை உடைப்பதை பார்க்காமல் மிஸ் செய்கிறேன்.

என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா. இந்தப் பூமியில் உன்னைப்போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னைக் காதலிக்கிறேன்.

நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.

அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத் தெரியும்” என்று சுகேஷ் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார்.

இதற்கு முன்னும் தனது பிறந்தநாள் அன்று சுகேஷ் உருகி உருகி கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுவரை வெளியிட்டிருக்கும் கடிதங்களுக்கு ஜாக்குலின் எந்தவித பதிலும் தெரிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#cinema

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 2
சினிமா

மாமன் திரைவிமர்சனம்

சூரி – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில்...

39 2
சினிமா

சமந்தாவுக்கும் புது காதலருக்கும் வயது வித்தியாசம் இவ்வளவா?

நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் காதலில் இருப்பதாக [கிசுகிசுக்கப்பட்டு வருகிறது....

36 3
சினிமா

அரசியல் பிரச்சாரத்தை தாண்டி சினிமாவில் விஜய் இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா?

நடிகர் விஜய், தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வருகிறார். தென்னிந்தியாவில்...

37 3
சினிமா

நான் அழுதேன், சிரித்தேன், ஒவ்வொரு நாளும்.. ரஜினிகாந்த் குறித்து லோகேஷ் சொன்ன ரகசியம்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர்,...