படப்பிடிப்பு முடியும் முன்னரே வசூலை தொடங்கிய வாரிசு படம்!

Varisu 3

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு திரைப்படத்தில் ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது.

முதல்கட்டமாக இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஓடிடி ரிலீஸ் உரிமை 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என்றும், அதேபோன்று சாட்டிலைட் உரிமையை ரூ 65 கோடி வியாபாரம் ஆகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

வாரிசு படம் படப்பிடிப்பு முடியும் முன்னரே வியாபாரம் தொடங்கி விட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#vijay #varisu #cinema

Exit mobile version