நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு தொழில் அதிபர் விசாகனை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று சவுந்தர்யா – விசாகன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை சவுந்தர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “கடவுளின் கருணையினாலும் பெற்றோரின் ஆசீர்வாதத்தாலும், விசாகன், வேத் மற்றும் நான் வேத்தின் இளைய சகோதரன் வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். மருத்துவர்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#soundarya-rajinikanth
Leave a comment