“திண்ணையில் இல்லை, ரோட்டில்தான் இருந்தேன்”: தன்னை விமர்சித்தவருக்கு நடிகர் சூரி ‘கூலான’ பதிலடி!

soori explanation for his controversy speech

நடிகர் சூரி காமெடியனாக நடிக்கத் தொடங்கி, தற்போது கோலிவுட்டில் நாயகனாகவும் படங்கள் நடித்து வருகிறார்.

அவர் சமீபத்தில் தீபாவளி கொண்டாடிய வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவர் வீட்டைப் பார்த்துவிட்டு நெட்டிசன் ஒருவர், “திண்ணையில கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை” என விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அந்த நபருக்கு நடிகர் சூரி மிகவும் நிதானமான மற்றும் உணர்வுபூர்வமான பதிலடியைக் கொடுத்துள்ளார்:

“திண்ணையில் இல்லை நண்பா  பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்”

என அந்த நபருக்கு பதிலடியோடு சேர்த்து, நம்பிக்கையான அறிவுரையையும் கூறி இருக்கிறார்.

 

Exit mobile version