‘எவனாவது கோட்டு போட்டு கோமாளி மாதிரி உளறிகிட்டு இருப்பான்’ – வைரலாகும் சந்தானம் பட டிரைலர்

agent111122 1

சந்தானம் நடித்த ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த டிரைலர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனியார் துப்பறியும் நிபுணராக சந்தானம் நடித்து இருக்கும் நிலையில் அவர் கண்டுபிடிக்கும் இரகசியங்கள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் கேலி கிண்டல்கள் ஆகியவற்றின் காட்சிகள் இந்த டிரைலரில் உள்ளன. மொத்தத்தில் இதுவரை இல்லாத அளவில் சந்தானம் ஒரு வித்தியாசமான கேரக்டரை இந்த படத்தில் கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைபடத்தை மனோஜ் பிதா என்பவர் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

#Cinema

Exit mobile version