சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ‘Fanly’ என்ற புதிய செயலியின் (App) அறிமுக விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு பேசியபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த மேடையில் இருந்த 3 பேருக்குமே மூளை அதிகம், எனக்குக் குறைவு. அதனாலேயே நடிகராக இருக்க முடிகிறது. மூளை அதிகமாக இருந்திருந்தால் இயக்குநரை டார்ச்சர் செய்ய ஆரம்பித்திருப்பேன். இப்போது அவர்கள் சொல்வதைக் கேட்டு நடித்து வருகிறேன்.
தனக்கு எப்போதுமே தன்னை வணங்கும் ரசிகர்கள் தேவையில்லை என்றும், அவர்கள் கடவுளையும், அப்பா அம்மாவையும் வணங்கினால் போதும் என்றும் சிவகார்த்திகேயன் கூறினார்.
“என்னுடன் அன்பாகப் பேசுவதையும், அண்ணனாகப் பழக வேண்டும் என்பதையே ஆசைப்படுகிறேன். அதனாலேயே எப்போதுமே தம்பி – தங்கைகள் என்று அழைக்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

