‘வசூல் ராஜா MBBS’ படத்தில் சினேகாவுக்கு முன் முதலில் தேர்வானது இவர் தான்: இயக்குநர் சரண் தகவல்!

25 68f763a7df7b4

இயக்குநர் சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி, 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘வசூல் ராஜா MBBS’. இந்தி மொழியில் வெளியான ‘முன்னா பாய் MBBS’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மறு ஆக்கமே இந்தப் படம்.

இப்படத்தில் கமலுடன் சினேகா, பிரபு, பிரகாஷ் ராஜ், கிரேஸி மோகன், காக்கா ராதாகிருஷ்ணன், நாகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. குறிப்பாக, இந்தப் பட வசனங்களுக்கும் நகைச்சுவைக் காட்சிகளுக்கும் கிரேஸி மோகன் அளித்த பங்களிப்பு மறக்க முடியாதது.

இப்படத்தில் கதாநாயகியாகச் சிறப்பாக நடித்திருந்தவர் சினேகா. ஆனால், இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தவர் சினேகா கிடையாதாம். முதலில் நடிகை ஜோதிகாதான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ஜோதிகாவால் இந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போகவே, அவருக்குப் பதிலாகச் சினேகா தேர்வாகியுள்ளார். இந்தத் தகவலை ஒரு பேட்டியின்போது இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார்.

Exit mobile version