ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது சர்வதேச அரங்குகளில் கௌரவிக்கப்படுகிறது.
‘அமரன்’ திரைப்படம் கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில் சிறந்த பிறமொழித் திரைப்படம் (Best Foreign Language Film) எனும் விருதை வென்றுள்ளது.
மேலும், கோவாவில் நடைபெறவுள்ள 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) ‘அமரன்’ திரைப்படம் தங்க மயில் விருதுக்கு (Golden Peacock Award) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), பனோரமா (Panorama) பிரிவின் கீழ் தொடக்கத் திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்படுகின்றது.
இந்த விழாவில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.