மறைந்த கன்னட நடிகர் நினைவிடத்தில் சிவகார்த்திகேயன் அஞ்சலி (படங்கள்)

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர் புனித்ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபொழுது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் கர்நாடகாவிற்கு சென்று அங்குள்ள புனித்ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் அவரின் சகோதரர் சிவராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

siva 02

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்

“ஒரு முறை மேடையில் நான் ரஜினி சார் போல பேசியதற்கு தனிப்பட்ட முறையில் என்னை அழைத்துப் பாராட்டினார். அவரிடம் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் எப்போதும் வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுவார். அவ்வளவு இனிமையான மனிதர்.

ஆனால் இப்படியான நிலையில் அவரின் வீட்டிற்கு வருவேன் என எதிர்பார்க்கவில்லை. அவர் மறைந்தாலும் அவர் செய்த சேவைகள் அவரை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும் என்று கூறினார்.

#CinemaNews

Exit mobile version