சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மதராஸி’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
தற்போது சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக, ‘டான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து இருவரும் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இதனால், சிவகார்த்திகேயன் பாலிவுட் சினிமா பக்கம் வர வாய்ப்பு உள்ளது என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகி