மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோ பதிவின் மூலம் வெளியிடப்பட்டது.
இப்படத்திற்கு ரஜினி நடிப்பில் 1986-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் ரஜினி போன்ற பாவனைகளுடன் சிவகார்த்திகேயன் சண்டையிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் அவரின் படத்திற்கு ரஜினி பட பெயரை வைத்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#maaveeran #sivakarthikeyan #cinema
Leave a comment