கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் வருகிற செப்டம்பர் 15-ந் திகதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரமோஷனுக்காக சிம்பு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்நிலையில் தனது திருமணம் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2-வது, 3-வது திருமணங்கள் நடக்கின்றன.
சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
எனவே இதுமாதிரி பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமைய காத்து இருப்பதில் தவறு இல்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இத்தகவல் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.
#Simbu
Leave a comment