மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சண்முக பாண்டியன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
இந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘படைத்தலைவன்’ திரைப்படம் வெளியானது. எனினும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்குப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ‘படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து, சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கொம்புசீவி’.
கேப்டனின் பாணியில் ஆக்ஷன் மற்றும் கிராமியப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், சண்முக பாண்டியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.