மூன்று மொழிகளில் உருவாகி வரும் ஷாருக்கான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரல்!

ஷாருக்கான் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்டமான திரைப்படமான பதான் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான் படத்திற்ககு முன்பு இது வெளியாகவுள்ளது.

இதன்படி இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார்.

இந்த படம் யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதும் சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pathaan26062022m

#CinemaNews

Exit mobile version