tamilnaadi 91 scaled
சினிமாபொழுதுபோக்கு

சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ் விவாகரத்து பெறுகிறார்களா?

Share

சீரியல் ஜோடி ஆல்யா மானசா, சஞ்சீவ் விவாகரத்து பெறுகிறார்களா?

வெள்ளத்திரை போல சின்னத்திரையிலும் ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைந்துள்ளார்கள். அப்படி ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு ஜோடி தான் ஆல்யா மானசா-சஞ்சீவ்.

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி தொடர் மூலம் ஒன்றாக நடிக்க தொடங்கியவர்களுக்கு முதல் சீரியலே பெரிய ஹிட். அதன்பிறகு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

ஆல்யா மானசா இனியா என்ற தொடர் நடிக்க சஞ்சீவ் கயல் என்ற தொடரில் நடித்து வருகிறார், இரண்டு தொடர்களுமே சன் டிவியில் தான் ஒளிபரப்பாகிறது.

சீரியலில் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட், தனியார் நிகழ்ச்சிகள் என இவர்கள் பிஸியாக இருக்கிறார்கள்.

அண்மையில் ஒரு பேட்டியில் சீரியல் நடிகை ஆல்யா மானசா பேசும்போது, நாங்கள் விவாகரத்து செய்யப் போகிறோம் என்ற செய்திவரும் போதெல்லாம் நாங்கள் சிரித்துக்கொண்டு தான் இருப்போம்.

பெரியதாக எந்த ரியாக்ஷனும் கொடுக்கப் போவது கிடையாது.

அதேபோல் கூடவே இருந்து சிலர் ஏமாற்றுவதை பார்த்து ஆரம்பத்தில் கோபப்பட்டு இருந்தேன், பழிவாங்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் நினைப்பேன், இப்போது அந்த சிந்தனையே இல்லை என பேசியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...