tamilni 244 scaled
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

சீமான் தாடி வளர்க்க காரணம் என்ன? பிரபல இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை

Share

சீமான் தாடி வளர்க்க காரணம் என்ன? பிரபல இயக்குநர் சொன்ன அந்த வார்த்தை

சமீப காலமாக சீமான் தாடி வளர்ப்பதற்கான காரணத்தை தற்போது அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் அரசியல் தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பான ஆலோசனை போன்றவற்றால் பிசியாக உள்ளனர்.

ஆனால், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் உள்ளார். அதாவது எப்போதும் அவர் பிட்டாகவே இருப்பார். மொத்தமாக ஷேவ் செய்து, முடியை குறைவாக வைத்திருப்பார்.

ஆனால் அவர் தற்போது, தாடி வைத்து, உடல் எடை கூடி அவரது தோற்றமே முழுவதுமாக மாறியுள்ளது. இவரது மாற்றதிற்கு என்ன காரணம் என்று இணையத்தில் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தான் ஏன் தாடி வளர்க்கிறேன் என்று தனியார் சேனல் ஒன்றிற்கு சீமான் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், “ஒரு படத்தில் நடிக்க வேண்டியுள்ளது. இன்னும் அந்த படத்திற்கு பெயர் வைக்கவில்லை. இயக்குநர் விக்னேஷ் சிவன் கேட்டுக்கொண்டதால் ஒப்புக்கொண்டேன்.

இதுவரை பார்க்காத தோற்றத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். தாடி வளர்க்க வேண்டும் என்று கூறினார். அதற்காக வளர்க்கிறேன்” என்றார்.

சினிமாவில் சீமான் நடித்தும்,படங்களை இயக்கியும் பல வருடங்கள் ஆன நிலையில் அவர் தனது தோற்றத்தை மாற்றி ரீஎன்ட்ரி கொடுக்கிறார் என்று பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...