பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ‘சாட்டர்டே இஸ் கம்மிங்கு’ இன்று மாலை 6.03 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
அதன்படி, தற்போது இதன் லிரிக் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். இதன் மூலம் சந்தானம் பாடகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Santhanam
1 Comment