புட்டுபுட்டு வைத்து அவமானப்படுத்திய சமீரா ரெட்டி
மாடலிங் துறையைச் சார்ந்த சமீரா ரெட்டி ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட மும்பையில் வளர்ந்தவர்.ஆரம்பத்தில் பாலிவூட் சினிமாவில் அதிக படங்களில் நடிதது வந்தார். பின்னர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் மூலம் ககதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு சமீரா ரெட்டியின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. இதையடுத்து, அசல், வெடி, வேட்டை உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அக்ஷய் வர்தே என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிக்க கணவர் அனுமதித்த போதும், சமீராவிற்கு அதில் உடன்பாடு இல்லாததால் ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகினார்.
இந்த நேரத்தில் தான் மீ டூ விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், சினிமாவில் தன்னை யார் யாரெல்லாம் அட்ஜெட்மெண்ட்டுக்கு அழைத்தார்கள், யார் டார்ச்சர் கொடுத்தது என அனைத்தையும் புட்டு புட்டு வைத்து பாலிவுட் மற்றும் கோலிவுட்டை கதிகலங்க வைத்து பெரிய சம்பவம் செய்தார்.
சில பிரபலங்கள் சமீரா ரெட்டிக்கு போன் செய்து தயவு செய்து என் பெயரை சொல்லாதே என்று கெஞ்சும் அளவுக்கு துணிச்சலான பெண்ணாக நடிகை சமீரா ரெட்டி நடந்து கொண்டார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.