குழந்தையை பிரிந்து தவிக்கும் சமந்தா

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார்.

நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இவர்கள் அண்மையில் விவாகரத்து செய்யப் போகிறோம் என வெளியிட்ட செய்திகள் ஊடங்களில் காட்டுத்தீ போல பரவியிருந்தன. சிறிது காலத்தில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்க வந்துவிட்டது எனவும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

908

அதில் ஒன்று மழை சூழ்ந்த சுற்றுப்புறத்தின் காட்சி. இன்னொன்று ஐதராபாத்தில் உள்ள தனது நாய்களான ஹாஷ் மற்றும் சாஷாவின் புகைப்படம்.

சோகமாக இருக்கும் ஹாஷ் மற்றும் சாஷாவின் படத்தில் ‘‘நான் ஒருநாள் இல்லை… என் சோகமான முதல் குழந்தை’’ என்று பகிர்ந்துள்ளார்.

ஹாஷ் தனது சகோதரி சாஷாவைவிட சோகமாக இருக்கிறது. ஆனால் ஒன்று, அவர்கள் தங்கள் அம்மாவை சென்னையில் நீண்ட நாட்கள் தங்க விடமாட்டார்கள் போல் தெரிகிறது என பதிவிட்டுள்ளார்.

நடிகை சமந்தா தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

#Cinema

Exit mobile version