மீண்டும் சர்ச்சை இயக்குநருடன் இணையும் சமந்தா!

சமந்தா நடிப்பில் அமேசான் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வெப்தொடர் ‘தி ஃபேமிலிமேன் 2’.

samantha2

இத் திரைப்படம் பெருமளவில் வரவேற்பை பெற்றிருந்தாலும், பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சை தொடர் இயக்குநருடன் சமந்தா மீண்டும் கைகோர்த்துள்ளார்.

‘தி ஃபேமிலிமேன் 2’ தொடருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, மீண்டும் இயக்குநர் ராஜ் & டிகே இயக்கவுள்ள தொடரில் சமந்தா நடிக்கவுள்ளார் எனவும் பிரபல பாலிவூட் நடிகர் வருண் தவான் நாயகனாக நடிக்கவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவில் இத் தொடரின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இறுதியில் இந்த தொடர் அமேசான் ஓடிடியில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#Cinema

Exit mobile version