சாய் பல்லவி மற்றும் ராணா நடித்த ‘விராத பர்வம்’ திரைப்படம் ஜூன்17 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
1990களில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து ஈர்க்கப்பட்ட ராணா, ஆரண்யா என்ற புனைப்பெயரால் அறியப்படும் தோழர் ராவண்ணாவின் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
சாய் பல்லவி, வெண்ணிலாவாக நடித்துள்ளார். விராத பர்வம் போரின் பின்னணியில் ஒரு அற்புதமான காதல் கதையாக வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த திரைப்படம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
திரையரங்குகளில் வெளியாகி 14 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ள இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியான 5 நாட்களில் நெட் பிளிக்ஸ் ட்ரெண்டில் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#CinemaNews
Leave a comment