19 12
சினிமாபொழுதுபோக்கு

தேசிய விருது பெறும்போது இதை செய்வேன்.. நடிகை சாய் பல்லவி உருக்கம்

Share

தேசிய விருது பெறும்போது இதை செய்வேன்.. நடிகை சாய் பல்லவி உருக்கம்

மலையத்தில் தனது திரை பயணத்தை துவங்கி, இன்று இந்திய சினிமாவில் முக்கிய நாயகியாக மாறியுள்ளார் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த அமரன் படம் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் தண்டேல் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருந்த சாய் பல்லவி, தற்போது பாலிவுட் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ராமாயணம் கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், சாய் பல்லவி பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில்,” என் பாட்டி 21 வயதாக இருந்தபோது என் திருமணத்தில் நான் அணிந்து கொள்ள எனக்கு ஸ்பெஷலாக ஒரு புடவையை பரிசாக கொடுத்தார்.

எனக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியாது. ஆனால் தேசிய விருது போன்று நான் விரும்பும் உயரிய விருதை பெறும் போது அந்த புடவையை அணிந்து கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால் எனக்கு தேசிய விருது கிடைத்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...