நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா என்பவர் தெலுங்கு திரையுலகில் விரைவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக அன்ஷூ மாலிகா நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் சிலர் அன்ஷூவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னிடம் அணுகியதாக ரோஜா கடந்த சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் படிப்பை முடித்த அன்ஷூ, தற்போது நடிப்பு பயிற்சி பெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
#Roja #Cinema
Leave a comment