download 11 1 4
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

ஆரோக்கியமான நகங்கள் பராமாிக்க ரிப்ஸ்!

Share

அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும்.

அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும்.

அது குறித்து தெரிந்துகொள்வோம்.  நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.

இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள்.

பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும். அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது.

ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.

ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.

நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் ‘நகச்சுற்று’ போன்ற பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும்.

எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.

‘கியூட்டிக்கிள்’ எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.

புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

#beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...

25 69059a37b6b5b
சினிமாபொழுதுபோக்கு

கைகுலுக்கியபோது ரசிகர் பிளேடால் கிழித்தார் – 2005ஆம் ஆண்டு சம்பவத்தை பகிர்ந்த நடிகர் அஜித்!

சினிமா மற்றும் கார் ரேஸ் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்குமார், அண்மையில்...

25 690059a3978f9
சினிமாபொழுதுபோக்கு

நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் சோதனை

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும்...