ஒரு நாளைக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா வாங்கும் சம்பளம்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் மஹாலக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை ரேஷ்மா சுவாரஸ்யமான பல விஷயங்களை அதில் பகிர்ந்துகொண்டார். இதில் குறிப்பாக உங்களுடைய ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு சற்றும் தயங்காமல் “ஒரு நாளைக்கு நான் லட்சங்களில் சம்பளம் வாங்கி வருகிறேன். என கூறினார். மேலும் தன்னிடம் வேலை பார்க்கும் உதவியாளர் ஒரு மாதத்திற்கு ரூ. 75,000 சம்பளம் வாங்குகிறார் என பேசியுள்ளார்.
Comments are closed.