17 35
சினிமாபொழுதுபோக்கு

கணவரால் குழந்தையை இழந்து பல வலிகளை கடந்த ரேஷ்மா.! சினிமாவில் சாதித்தது எப்படி?

Share

தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக காணப்படும் பிரசாத் பசுப்பிலேட்டியின் மகள்தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் வலம் வரும் ஒரு பிரபலமாக காணப்படுகின்றார். ஆனாலும் இவர் கடந்து வந்த பாதை மிகவும் வலிகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே ரேஷ்மா பசுபுலேட்டியின் வாழ்க்கையில் நடந்த ஏற்ற இறக்கங்களை விரிவாக பார்ப்போம்.

ரேஷ்மா பசுபுலேட்டி இந்தியாவில் பிறந்து இருந்தாலும் அவர் படித்தது, காலேஜ் முடித்தது எல்லாமே அமெரிக்காவில் தான். இவருடைய அப்பா ஆந்திராவில் பெரிய ப்ரொடியூசராக காணப்படுகின்றார். அமெரிக்காவில் தனது காலேஜ் படிப்பை முடித்த ரேஷ்மாவுக்கு அங்கேயே பிரபல டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை கிடைக்கின்றது.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள ஒரு ஆப்ரிக்கனை காதலித்து திருமணம் செய்கின்றார். அவர் அமெரிக்காவை சிட்டிசனாக கொண்டவர். இவர்களுக்கு முதலில் ஒரு குழந்தை உருவாகின்றது. அந்த குழந்தை கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் கடந்து டெலிவரிக்கு தயாரான நிலையில், இதயத்துடிப்பு அற்ற  நிலையில் இறந்தே பிறக்கின்றது. இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றார் ரேஷ்மா.

அதன் பின்பு இரண்டாவது குழந்தையை பாதுகாப்பாக பெற்று எடுக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவனமாக இருக்கின்றார். எனினும் அவருடைய கணவர் சாதாரணமாகவே ஒரு பாக்ஸர் என்பதால் தான் ஆக்டிவாக இருப்பதற்கு நிறைய மாத்திரைகளை எடுத்துக் கொள்வாராம். அதன் விளைவாக நிறைய கோபப்படுவதாகவும், ஒரு நாள் அந்த கோபத்தில் தன்னை தாக்கிய போது தனக்கு ஏற்பட்ட குருதி பெருக்கு காரணமாக தானே காரில் சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும்  தெரிவித்தார்.

மேலும் இதன்போது கருவில் நான்கரை மாதம் இருந்த குழந்தையை காப்பாற்ற வேண்டுமென்றால் உடனடியாக டெலிவரி பண்ண வேண்டும். அப்போதுதான் இரண்டு பேரையும் காப்பாற்றலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை செய்துள்ளார்கள். அதன்படியே குழந்தையை பிரசவித்து இன்குபேட்டரில் வைத்து பாதுகாத்து உள்ளார்கள். அந்த குழந்தை 9 மாதங்களைக் கடந்தால் காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் சொல்லி உள்ளனர். அதன்படியே ஒரு மாதிரி அந்த குழந்தையை காப்பாற்றி உள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து தனது கணவரை விவாகரத்து செய்தார் ரேஷ்மா. அதன் பின்பு தனது குழந்தைக்காகவே வாழ்ந்து வருகிறார். மேலும் இந்தியாவிற்கு திரும்பிய ரேஷ்மா தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். அதன் பின்பு தனது குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நேசிங் பயிற்சியும் பெற்றுள்ளார். அதில் நிறைய கற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தனது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் களமிறங்கியுள்ளார். அதில் தனக்கு என்ன கேரக்டர் கிடைக்கின்றதோ அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நடித்து வந்துள்ளார். அதன்படி வம்சம், மரகத வீணை, வாணி ராணி, அபி டெய்லர், சீதாராம்  உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவருக்கு சிறந்த அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல்.

அதன் பின்பு 2015 ஆம் ஆண்டு வெளியான ‘மசாலா திரைப்படம்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின்பு தமிழ், மலையாளம், தெலுங்கு என பிற மொழிகளிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரைப்படம் தான் ‘வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன்’. இந்த படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்திருப்பார். இது அவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது.

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றார்.

மேலும் இவருடைய வாழ்க்கையில் இனி இன்னொருவருக்கு இடமில்லை என்று தனது மகனுக்காகவே வாழ்ந்து வருகின்றார். மகன் வளர்ந்த பின் தன்னை கவனித்துக் கொள்வார் என்ற  நம்பிக்கையுடன் தனது சினிமா கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார் ரேஷ்மா பசுபுலேட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Sandy Master plays the female role
சினிமாபொழுதுபோக்கு

சுமார் மூஞ்சி குமாருக்குப் பதிலாக சாண்டி மாஸ்டர்? ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ உருவாகிறது!

விஜய் சேதுபதி நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’...

25 691f126a70d10 md
சினிமாபொழுதுபோக்கு

மருதநாயகம் படம் சாத்தியமாகலாம்: கோவாவில் கமல் ஹாசன் புதிய நம்பிக்கை!

சினிமாவின் மீது தீராத காதல் கொண்டுள்ள பிரபலங்களில் ஒருவரும், இந்திய சினிமாவின் முன்னணி நடிகருமான கமல்ஹாசனின்...

25 691c8fc6d2dda
சினிமாபொழுதுபோக்கு

நடிகை மான்யா ஆனந்த் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: ‘போலிக் கமிட்மென்ட் அழைப்புகள் என் பெயரில் வரவில்லை’ – தனுஷின் மேனேஜர் அறிக்கை!

நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் (Sreyas) பெயரில் பட வாய்ப்புக்காகக் கமிட்மென்ட் (அட்ஜஸ்ட்மென்ட்) கேட்டதாகச் சீரியல்...

lights on. camera rolling. shoot starts today for project no.7.featuring the elegant and ench
சினிமாபொழுதுபோக்கு

லோகா படத்தின் நாயகி கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் புதுப் படம் ஆரம்பம் – SR பிரபு தயாரிப்பில் பெண்கள் மையக் கதை!

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த மலையாளத் திரைப்படமான ‘லோகா’ (Loka), கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி...