அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, உடைந்து போனேன்- சீரியல் நடிகை ரேஷ்மா எமோஷ்னல்

images 2

அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது, உடைந்து போனேன்- சீரியல் நடிகை ரேஷ்மா எமோஷ்னல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி, வம்சம், மரகதவீணை போன்ற சீரியல்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த சீரியல்களை தாண்டி வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் பிரபலம் ஆனார்.

படங்களில் நடித்துவந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அதேபோல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

சீரியல்கள், படங்களை தாண்டி இன்ஸ்டாவில் படு ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு பேட்டியில் எமோஷ்னலான விஷயத்தை கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கணவருடன் இருந்தபோது நான் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததேன், அதை மறந்துவிட்டு என்னை அவர் அடித்துவிட்டார். அதனால் குழந்தை வெளியில் வந்துவிட்டது, அவர் பயத்தில் என்னை விட்டு ஓடிவிட்டார்.

தனியாக நானே என்ன செய்வது என தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்தேன். நான்கரை மாத குழந்தையாக ராகுல் பிறந்தான், அப்போது முதல் 9 மாதம் வரை அவன் இன்குபெட்டரில் இருந்தான்.

அங்கு எனது நிலையை சமாளிக்க முடியாமல் இங்கு வந்தேன். ராகுல் பிறப்பதற்கு முன்பே எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. ராகுலும் போய்விடுவானோ என்ற பயம் எனக்குள் இருந்தது, அவனை காப்பாற்ற போராடினேன்.

என் முதல் குழந்தையை எல்லோரும் மறந்துவிட்டார்கள், ஆனால் என்னால் அந்த நாளை இன்று வரை மறக்கவே முடியவில்லை என எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Exit mobile version