நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்: ஆர்த்தியை வம்புக்கு இழுக்கும் கெனிஷா!

28 2

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல வெற்றிப் படங்களில் நடித்த ரவி மோகன், தற்போது தனது திரைப்பயணத்தில் புதிய பரிமாணமாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். ‘அன் ஆர்டினரி மேன்’ (An Ordinary Man) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், நகைச்சுவை நடிகர் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவி மோகனின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைபெற்றது. நீண்ட நாட்களாகத் திட்டமிட்டிருந்த இந்தப் படத்தை இயக்க இப்போதுதான் வாய்ப்பு அமைந்திருப்பதாக ரவி மோகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய பயணத்தின் தொடக்க விழாவில் ரவி மோகனுடன், பாடகி கெனிஷா பிரான்சிஸும் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் போது கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை வெளியிட்டார். அதில், “ரவி மோகன் பல வருடங்களாகத் தனது முதல் படத்தை இயக்க வேண்டும் என்று காத்திருந்தார். பல தடைகள் மற்றும் கஷ்டங்களைக் கடந்து, இன்று அவர் தனது கனவை நனவாக்குகிறார். எவ்வளவு விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவிட்டி இருந்தாலும், நான் எப்போதும் அவர் பக்கமே இருப்பேன்” எனப் பாராட்டிப் பேசியுள்ளார்.

இருப்பினும், கெனிஷா பதிவிட்டிருந்த வீடியோவில் அவர் குறிப்பிட்ட “கடந்த கால வாழ்க்கை” தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சிலர் ரவி மோகனின் புதிய முயற்சியை மனதார வாழ்த்தினாலும், கெனிஷா தேவையில்லாமல் பழைய விஷயங்களைப் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம் என விமர்சித்து வருகின்றனர். முன்னதாக, ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இடையே நிலவும் நட்பு, அவரது குடும்ப வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட விவகாரங்கள் நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தனது தனிப்பட்ட வாழ்க்கை விவகாரங்கள் குறித்துப் பேசியபோது, மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை நடத்திய விதம் குறித்து ரவி மோகன் முன்னரே பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அக்குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரவி மோகன் மீண்டும் தனது படைப்பாற்றலில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். நடிகராகப் புகழ்பெற்ற ரவி மோகன், முதல்முறை இயக்குநராக யோகி பாபுவை வைத்துப் படம் எடுக்கும் இந்த புதிய முயற்சி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version