இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பாடல்!

download 17 1 1

இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பாடல்!

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `இராவண கோட்டம்’. சாந்தனு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.

இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இராவண கோட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இப்படம் வருகிற மே 12ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இராவண கோட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அத்தனபேர் மத்தியில’ பாடலை நடிகர் ஜெயம் ரவி சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டார்.

இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#cinema

Exit mobile version