13 2
பொழுதுபோக்குசினிமா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா திருமணம்: பழைய கசப்பான நினைவுகளைக் கடந்த நட்சத்திர ஜோடி!

Share

தென்னிந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடிகளான ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா, நீண்ட கால வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேற்று முன்தினம் (26.02.2026) உதய்ப்பூரில் உள்ள நட்சத்திர விருந்தகத்தில் கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டனர். இந்தத் திருமணத் கொண்டாட்டங்கள் ஒருபுறம் வைரலாகி வரும் நிலையில், ராஷ்மிகாவின் கடந்த கால கசப்பான நினைவுகள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதனை எப்படிக் கையாண்டார்கள் என்பது குறித்த தகவல்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.

2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியுடனான நிச்சயதார்த்தம் முறிந்தபோது, ராஷ்மிகா சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும் வெறுப்பையும் எதிர்கொண்டார். அந்தத் தருணத்தில் அவரது தாயார் சுமன் மந்தனா தெரிவித்த கருத்துக்கள், ஒரு குடும்பம் அந்த வலியை எப்படிக் கடந்து வந்தது என்பதை விளக்குகின்றன. “நிச்சயதார்த்தம் நின்றபோது நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானோம். அதிலிருந்து மீண்டு வர எங்களுக்கு நீண்ட காலம் பிடித்தது. ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு விருப்பமான வாழ்க்கையைத் தேர்வு செய்யும் உரிமை உண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ராஷ்மிகா தனது சிறந்த நண்பனான விஜய் தேவரகொண்டாவையே கணவனாகத் தேர்ந்தெடுத்துள்ளார். “என்னை நானே உணர வைத்த மனிதர்” என விஜயைப் பற்றி ராஷ்மிகா நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ராஷ்மிகா மற்றும் அவரது குடும்பத்தினர் பழைய கசப்பான நினைவுகளை முழுமையாகக் கடந்து, ஒரு புதிய மகிழ்ச்சியான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
07 2
பொழுதுபோக்குசினிமா

திரையுலகினருக்கு மகிழ்ச்சிச் செய்தி: நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குனர் பாரதிராஜா வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார்!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரும், கலைஞருமான பாரதிராஜா, நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள...

26
பொழுதுபோக்குசினிமா

ரஜினி – கமல் இணையும் பிரம்மாண்ட படம்: மம்முட்டி வில்லனா? கோலிவுட்டை அதிரவைக்கும் புதிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே திரையில் தோன்றவுள்ள செய்தி...

cin
பொழுதுபோக்குசினிமா

நட்சத்திரங்களின் திருமண உடைகள்: கோடிகளில் ஜொலிக்கும் லெஹங்காக்கள் – ரசிகர்களை வியக்க வைக்கும் ஆச்சரியமான விலைப் பட்டியல்!

இந்தியத் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களின் திருமணங்கள் என்றாலே அங்கு ஃபேஷன் மற்றும் ஆடம்பரத்திற்குப் பஞ்சம் இருக்காது....

12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...