தளபதி விஜய் நடிபில் மிகப்பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் ‘வாரிசு’.
திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.
முதல்கட்டமாக படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை இந்த பாடலின் புரமோ வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து சற்றுமுன் ‘வாரிசு’ படத்தின் ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. 30 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த பாடலின் புரமோ வரிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
‘ரஞ்சிதமே ரஞ்சிதமே மனசை கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை உதடு வலிக்க கொஞ்சணுமே’
இந்த பாடலை தற்போது விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். தளபதி விஜய்யின் மாஸ் டான்ஸ், பிரமாண்ட செட் ஆகியவை இந்த 30 வினாடி காட்சிகளில் காண முடிகிறது.
இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார். தமன் இசையமைப்பில் உருவாகி இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாடலின் முழுவடிவம் வரும் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தளபதி ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
#Cinema

