யூடியூப்பை அதிர வைக்கும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’

1788610 ra

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதனிடையே ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலைகடந்த 5ம் தேதி மாலை 5.30 மணிக்கு படக்குழு வெளியிட்டிருந்தது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான ‘ரஞ்சிதமே’ பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

இந்நிலையில் இந்த பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை யூட்டியூப்பில் முதல் இடத்தை தக்கவைத்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

https://youtu.be/zuVV9Y55gvc

#Cinema

Exit mobile version