ரஜினி சிறந்த நடிகரா? ஸ்லோமோஷன் மட்டும் இல்லை என்றால்.. தாக்கி பேசிய ராம் கோபால் வர்மா
இயக்குனர் ராம் கோபால் வர்மா அவ்வப்போது சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். அவர் இயக்கும் படங்களும் அவரை போலவே வில்லங்கமாகவே இருக்கும்.
சமீப காலமாக அவர் இயக்கும் படங்கள் பி கிரேடு படங்கள் போல இருக்கிறது என்ற ஒரு விமர்சனமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஜினியை தாக்கி பேசி இருக்கிறார் ராம் கோபால் வர்மா.
“ஒரு நடிகர் எந்த விதமான கதாபாத்திரத்திலும் நடிக்க கூடியவர். ஆனால் ஸ்டார் என்பவர் ரசிகர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நடிப்பவர்.”
“ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகரா என கேட்டால் எனக்கு தெரியவில்லை. ஸ்லோ மோஷன் மட்டும் இல்லை என்றால் ரஜினியால் சினிமாவில் நீடித்திருக்க முடியாது” என அவர் கூறி இருக்கிறார்.