7 2
இந்தியாசினிமாசெய்திகள்பொழுதுபோக்கு

2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்.., அப்போலோ மருத்துவமனை அறிக்கை

Share

2 நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்.., அப்போலோ மருத்துவமனை அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு அவரது அடிவயிறுபகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.

அதேபோல பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருக்கும் காரணத்தால் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி பரவிய நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், இது கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரது மனைவி லதா விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார். அவர் 2 நாட்களில் வீடு திரும்புவார்.

இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த வீக்கம், அறுவை சிகிச்சை இல்லாமல் Transcatheter முறையில் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...