என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி என தாதாசாகேப் பால்கே விருதை பெற்ற நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங்கினார். திரையுலகில் ரஜினிகாந்த் நிகழ்த்தியுள்ள வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பின்னர் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றும்போது,
‘எனக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி, இந்த விருதை என்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்.
மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூருக்கு நன்றி. ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#CinemaNews
Leave a comment