“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

2009697 cinema radhikaapte2

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான் பாலிவுட்டில் ‘Vaah! Life Ho Toh Aisi’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தி மட்டுமின்றி மராத்தி, பெங்காலி போன்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் பிரகாஷ் ராஜ் நடித்த ‘தோனி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வெற்றிச் செல்வன்’ போன்ற படங்களில் நடித்தார். இருப்பினும், இவருக்குத் தமிழில் நல்ல பிரபலத்தை ஏற்படுத்தியது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படம்தான். பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் ராதிகா ஆப்தே பேசிய கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் அவர், “திரைப்படங்கள் ஹீரோக்களுக்காக மட்டும்தான் எடுக்கப்படுகின்றன. ஹீரோயின்களை நடனக் காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றனர். மற்றபடி, நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லை” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version