மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்த தகவலை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்த் ஆகிய இருவரும் கலந்து கொள்வதாகவும் இந்த விழாவில் டிரைலரும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் ஒரே விழாவில் பங்கு கொள்ள இருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Rajini #Kamal