நான் போகிறேன்…! சீரியல் நடிகை ரட்சிதாவின் திடீர் பதிவு!

WhatsApp Image 2023 06 21 at 10.31.04 AM

நான் போகிறேன்…! சீரியல் நடிகை ரட்சிதாவின் திடீர் பதிவு!

தமிழ்த் சின்னத்திரையில் ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரட்சிதா. அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார்.

எனினும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் சட்டப்பூர்வமாக விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7இல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் நுழைந்த தினேஷ், 3வது ரன்னராக வெற்றி பெற்று வெளியேறினார்.

இந்த நிலையில், நடிகை ரட்சிதா அடிக்கடி வீடியோ, போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், Live life “Queen size” என கேப்ஷன் போட்டு, தனியாக இருக்கும் சோகமான பாடல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

Exit mobile version