நடிகை ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

24 6637253fa60c3

நடிகை ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. கற்க கசடற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடிக்க துவங்கினார்.

ஒரு கட்டத்தில் இவர் நடித்த படங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் ராய் லட்சுமி படங்களில் இடம்பெறும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

நடிகை ராய் லட்சுமிக்கு இன்று 35வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலகினரும் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் வழியாக தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகிகளில் ஒருவரான ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு ரூ. 30 கோடியிலிருந்து ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

நடிகை ராய் லட்சுமியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version