பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் தாயார் காலமானார்

தமிழக முன்னாள் துணை அமைச்சர் ஐசரி வேலனின் மனைவியும், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தரும், வேல்ஸ் இன்டர்நேஷனல் உரிமையாளரும், பிரபல தயாரிப்பாளருமான ஐசரி கணேசனின் தாயாருமான புஷ்பா ஐசரி வேலன் இன்று காலை காலமானார்.

75 வயதாகும் புஷ்பா ஐசரி வேலன், இன்று காலை 9.30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவரின் இறுதிச்சடங்குகள் நாளை காலை 9 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டு தாழம்புர் வேல்ஸ் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசரி வேலனின் மனைவி புஷ்பாவின் மறைவிற்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐசரி கணேசனின் குடும்பத்திற்கு நேரிலும், சோஷியல் மீடியா வாயிலாக இரங்கலும், ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

#isariganesh #death

puspa isari ganesh

 

 

Exit mobile version