‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படங்களை இயக்கினார். தற்போது ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார். இப் படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் ‘ஜவான்’ படம் வருகிற ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் திகதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் பிசியாக இருந்து வருவதால் ‘ ஜவான்’ படத்தில் நடிக்க போதுமான கால்ஷீட் கொடுக்கமுடியாமல் போய்விட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு முடிவடைய சிறிது நாட்கள் எடுக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் திகதியை ஒக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#cinema