பிரபல நடிகருடன் இணையும் பிரியங்காமோகன்

download 9 1 13

பிரபல நடிகருடன் இணையும் பிரியங்காமோகன்

தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தவர் பிரியங்கா மோகன்.

இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா மோகன், பவன் கல்யாண் நடித்து வரும் ஓஜி படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை சுஜீத் இயக்கவுள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#cinema

 

Exit mobile version