பிரியா பவானி சங்கர் மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
கடைக்குட்ட் சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.
இந்நிலையில் திருமணம் பற்றிய கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பலரின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரியா பவானி சங்கரிடம் திருமணம் செய்து கொள்வீர்களா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், பண்ணும் போது பண்ணுவேன் என பதில் அளித்துள்ளார்.
மேலும், சுதந்திரமான பெண் என்றால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற எந்த அர்த்தமும் இல்லை. சுதந்திரமான பெண் என்பதற்காக அப்பா, அம்மா இல்லாமலா இருக்கிறோம், அதே போல திருமணம் செய்து கொண்டாலும், கணவருடனும் சுதந்திரமாக இருக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
தற்போது இது சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
#priyabhavanishankar #wedding #cinema