தமிழ் சினிமாவின் இளம் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் அடுத்த பிரம்மாண்டத் திரைப்படமான ‘LiK’ படத்தின் வெளியீடு தள்ளிப்போகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த ‘லவ் டுடே’ (Love Today), ‘டிராகன்’ (Dragon), ‘டூட்’ (Dude) ஆகிய மூன்று படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளன. இந்தச் சூழலில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் LiK திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, க்ரித்தி ஷெட்டி, யோகி பாபு, சீமான், கௌரி கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இம்மாதம் 18ஆம் தேதி LiK திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தள்ளிப்போய்விட்டதாக சொல்லப்படுகிறது. 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி காதலர் தினத்திற்கு முன் வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

