இயக்குநர் மாருதி இயக்கத்தில், பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் வெளியான ‘ராஜா சாப்’ (The Raja Saab) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது.
ஹாரர் ஃபேண்டஸி (Horror Fantasy) பாணியில் உருவான இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரிதி குமார் என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
பிரபாஸின் முந்தைய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியதால், பாக்ஸ் ஆபீஸில் வசூல் ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
தற்போது இப்படத்தின் பின்னணி குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குநர் மாருதி இந்தக் கதையை முதலில் பிரபாஸுக்காக உருவாக்கவில்லை:மாருதி முதலில் இந்தக் கதையை ‘நேச்சுரல் ஸ்டார்’ நாணியிடம் தான் கூறியுள்ளார். ஆனால், சில காரணங்களால் நாணி இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன் பின்னர், தமிழ் நடிகர் சூர்யாவிடம் இந்தக் கதையைக் கூற மாருதி முயற்சி செய்துள்ளார். எனினும், அது கைகூடவில்லை. இறுதியாகவே இந்தக் கதை பிரபாஸிடம் சென்று, அவர் சம்மதம் தெரிவித்த பிறகு படமாக்கப்பட்டது.
தற்போது படம் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்தக் கதை மற்ற நடிகர்களுக்குப் பொருத்தமாக இருந்திருக்குமோ எனச் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. பிரபாஸின் பிரம்மாண்ட பிம்பத்திற்கு இந்தக் கதைக்களம் செட் ஆகவில்லை என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

